சேமிப்பு கிடங்கு முக்கியத்துவம்

தானிய சேமிப்பில் ஏற்படும் பிரச்சனைகளும் தீர்வுகளும்

ஒரு நாட்டின் டிபாருளாதாரத்தை நிர்ணயிக்கும் இயல்பு வாய்ந்த சிறப்பு மிக்க விவசாயத்தொழிலில் எல்லா தானியங்களும் எல்லா நாட்களிலும் கிடைப்பதில்லை. “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்பதற்கேற்ப நாம் கிடைக்கும் சந்தர்பத்தைப் பயன்படுத்தி தானியங்கள் கிடைக்கும் போதே அதனை சேமித்து வைத்துக் கொள்ள வேண்மு் என்பது பரம்பரை பரம்பரையாக நம் மூதாதையர் முதற்டிகாண்டு கையர்ணடு வரக்கூடிய ஒரு பழக்கமாகும். நம் நாட்டில் சுமாராக 45 சதவீத தானியங்கள் கிராம மக்களிடம் சேமித்து வைக்கப்படுகின்றன.


தானியங்களை மூன்று காரணங்களுக்காகச் சேமிக்கிறோம்

  • உணவிற்காக - ஆண்டு முழுவதும் தானியங்கள் அறுவடை செய்யப்படுவதில்லை. எனவே நம் உவுத் தேவையினைப் பூர்த்தி செய்பவதற்கு தானிய சேமிப்பு அவசியமாகிறது
  • விதைக்காக அடுத்த பருவத்ில் விதைப்பதற்காக சேமித்து வைத்தல்
  • விற்பனைக்காக - அதிக விலை கிடைக்கும் என்பதற்காகச் சேமித்தல்

இவ்வாறு கண்ணும் கருத்துமாக சேமித்த உணவு தானியங்களைப் புழு, பூச்சிகள் வண்டுகள்,எலிலகள் மற்றும் இயற்கை மாற்றங்கள் முதலியன பாதித்து, அவற்றின் சத்துக்களைக் குறைப்பதோடு, அதனுடை தரத்தியும் இழக்க வைக்கின்றது. இதனால் சுமார் 10 சதவிகித தானியம் வீணாகிறது.
இந்த இழப்பானது பயிரின் வகை, தானியத்தைத்த தாக்கும் உயிரினங்கள், சேமிக்கும் காலம், அறுவடை செய்யும் முறை, காய வைக்கும் முறை, கையாளும் முறை, சுத்தம் செய்யும் வழிமுறைகள், போக்குவரத்த, பிரித்தெடுத்தல் (அ) வகை்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் காலநிலை மாற்றங்கள் முதலியவற்றைப் பொறுத்து அமையும்.

1.களத்துமேடு கதிரழக்கும் களம்

அசுத்தமான களத்துமேடு கிருமிகள், பூச்சி முட்டைகள் பூச்சிகள், குப்பை ஆகியவற்றின் இரப்பிடம். இத்தகைய களத்துமேட்டில் அடிக்கும் தானியம், பூச்சி, புழுக்களால் எவ்வாறு தாக்கப்படும் என்று சொல்லவும் வேண்டுமா

2. போக்குவரத்து
களத்து மேடு முதல் தானயிம் சேகரித்து வைக்கும் இடத்தையடையும் வரை பல்வேறு வழிகளில் சேதமடைகின்னறன். உதாரணமாக லாரிகளில் கொண்டு செல்லப்படும் மூட்டைகள் தவறாகக் ககையாளுவதாலோ அல்லது கோணிப்பை கிழிவதாலோ சாலைகளில் கொட்டிக் கொண்டு போவதை உதாரமாகக்  கூறலாம்.

3.ஈரப்பதம்
தானியங்களை சரியான விகிதத்தில்  சரியான அளவிற்குக் காய வைக்காமல் விட்டுவிடாமல் எளிதில் பூச்சிகள், பூஞ்சாணம் முதலியவை தாக்கி மக்கிய வாடை, துர்நாற்றம், சத்துக்கள் குறைவு, தரம் குறைவு மேலும் அதனை உண்டால் நச்சுத்தன்மை உண்டாதலர் போன்ற விளைவுகள் ஏற்படும். உதாரணமாக தானியங்கள் சுவாசிக்கும்பொது கரியமில வாயு. நீராவி மற்றும் வெப்பம் முதலியன் வெளிப்படுகின்றன். அந்த நீராவி மற்றும் வெப்பம் முதலியன வெளிப்படுகின்றன. அந்த நீராவி தானியத்தின் மீது படிகின்றது. இதனால் ஈரப்பதம் அதிகமாகிறது. மேலும் தானியங்களை கடும் வெய்யிலில் உலர்த்தினால் வெப்பம் ஒரே அளவில் தானியங்களில் ஊடுருவாது, குறிப்பாக தானியத்தின் நடுப்பகுதியில் வெப்பம் நுழையாமால் மேல் பகுதி மட்டும் அதிக வெப்பத்தினால் தானியங்கள் பாதிக்கப்பட்டு உடைய வாய்ப்பு உண்டு. எனவே தானியங்களை நிழலில் அல்லது உச்சி வெய்யில் வரும்வரை உலர்த்த வேண்டும்.

4. பறவைகள்
அறுவடைக்கு முன் ஏற்படும் சேதம் அதிக அளவு பறவைகளால் ஏற்படுகிறது. அறுவடைக்குப்பின் குறிப்பாக உலர்த்தும் போதும், போக்குவரத்தின் போதும், செமித்து வைக்கும்போதும் கவனக் குறவைாக இரப்பதால் பறவைகள் செதம் விளைவிக்கின்றன. பறவைகள் ஒரு நாளைக்கு சுமார் 8-25 கிராம தானியங்களை உணவாக உட்கொள்கின்றன. இவை உண்பதோடு விட்டுவிடாமல் தங்களுடைய இறகுகள். கழிவுப்பொருட்கள், இறந்த உடல்கள் முதலியனவற்றாலும் தானியங்களை செதப்படுத்துகின்றன.

5. பக்குவப்படுத்துதல்
பக்குவப்படுத்தும்போது கையாளப்படும் முறைகள் தவறாக இரப்பதாலும், கவனக்குறைவினாலும் சேதம் ஏற்படுகிறது. உதாரணமாக இயந்திரங்களை மிக அதிகமாக அல்லது தவறான முறையில் கையாளுவதால் அதிக சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. தானியம் நொறுங்குததல் அளவுக்கு அதிகமாக இருப்பதால் புழு பூச்சிகள் எிளதில் தாக்க ஏதுவாகிறது. மேலம் மிகப் பழைய சேமிப்பு உபகரணங்களை பயன்படுத்துவதாலும் புழு, பூச்சி, ஈரப்பதம் போன்ற காரணிகள் தாக்க அடிகோலுகிறது.

6.எலிகள்
வயல் வெளியில் தொடங்கி வீடு வரை எலிகள் தானியங்களை பாழாக்கிக்கொண்டே  இருக்கின்றன. அவை தானியஙகளை மட்டுமின்றி உயர்தர மரச்சாமான்கள், விலை மதிப்புள்ள நூல்கள், பிளாஸ்டிக் சாமான்கள், துணிகள், உணவுப் பதார்த்தங்கள் பொன்றவற்றை கடித்து விடுகின்றன. தான் சாப்பிடுவது மட்டுமல்லாது சிறுநீர், கழிவுப்பொருட்கள், மடி முதலியவற்றை விட்டுச் செல்வதின் மூலம் தானியம் தரம் குறைந்து உபயோகமற்றதாகிறது. சுமாராக 6 எலிகள் ஒரு மனிதன் உண்ணும் உணவை உட்கொள்கின்றது. இந்திய மக்கள் தொகையில் 6 மடங்கு அதிகமுள்ள இந்த எலிகள் எவ்வளவு சேதம் விளைவிக்கும் என்றும், எவ்வளவு உணவு அகைளுக்குத் தேவையென்றும் சொல்ல வேண்டியதில்லை.

7. புழு பூச்சிகள்
இவை வயல், சேமிப்பு, உபகரணம், சேமிப்புகிடங்க, சேமிப்பு களஞ்சியம் வரை எல்லா நிலைகளிலும் குறிப்பிடத்தக்க அளவு சேதத்தை ஏற்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றன. சேமிக்கும் தானியங்களிலிருந்து ஊட்டச்சத்தினை எடுத்து உண்பதோடு தானியத்தில் ஒட்டைபோட்டு, முளைக்கும் தன்மையை இழக்கச் செய்கிறது. மேலும் முட்டை வடிவில் தானியங்களோடு உள்ள புழு பூச்சிகள் மிக விலைவில் பெருகி பெரும் பங்கு சேதம் விளைவிக்கின்றன.

மேற்கூறப்பட்ட பல காரணிகளால் தானியங்கள் சுமார் 9.3 சதவீதம் சேதமடைகிறது. பாதுகாக்கும் ஒவ்வொரு தானியமும் விளைவிக்கப்படும் ஒவ்வொரு தானியத்திற்கும் சமம் என்பதால் தானியத்தைப் பாதுகாக்க வேண்டியது நமது தலையாய கடமையாகும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013